அறம் பொருள் இன்பம் வீடு:
******************************
அறவழி நின்று!
அன்புமொழி பேசி!
மனத்தூய்மை அதனை
மனத்துள் நிறுத்தி!
பொய்ம்மை களைந்து!
பொறாமை நீக்கி
கடுஞ்சினம் ஒழித்து!
பேராசை தவிர்த்து!
எவ்வுயிரையும் தன்
உயிராய் மதித்து!
அயற்சி இன்றியே
அயராது உழைத்து!
பெற்ற பொருளதனை
கரவாது இல்லார்க்கு
உவகையுடன் ஈந்து!
பிறனில் விழையா
பேராண்மை கொண்டு!
கொண்ட மனையாளையும்
உயிரெனவே மதித்து!
பெற்ற மக்கட்கும்
மற்றவர்க்கும் அறநெறி காட்டி!
நாடி வந்தோர்க்கு
இன்முகம் காட்டி!
விருந்து அளித்து
ஒருபால் கோடாது!
நடுவுநிலை நின்று!
தனிமனித ஒழுக்கந்
தனையே திருவாய் மதித்து!
எல்லோரிடத்தும் நல்
இணக்கம் கொண்டு!
நட்பை வளர்த்து!
நலம்பல செய்து!
உன்னில் நீ
ஆனந்தம் அடைந்து!
இதயம் கனிந்தால்!
வீடு பேறடைதல்
திண்ணியமே.!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment