பூக்கின்ற பூவதுவும்
உதிர்ந்து போகும்!
தளிர்க்கின்ற தளிரும்
சருகாகும்!
உதிக்கின்ற சூரியனும்
மறைந்து விடும்!
கருமயிரும் வெண்மையாகும்!
கிழிந்த புடவையாய்
வாழ்துவும் நைந்தே
போகும்!
பிறப்பும் இறப்பும்
மாறி மாறி
சுழன்று வரும்!
நிலையில்லா உலகில்
நிலையானவன் இறைவனே!
அறமெனுந் தோணியேறி!
வினைக்கடலை நீந்தி!
நடுவுநிலை நின்று!
உயிர்களிடம் அன்புகாட்டி!
அவனடி சேர்ந்தால்
துன்பம் இன்றி
இன்பமாய் வாழ்ந்திடலாம்.!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment