கொஞ்சும் விழிகள்:
*******-***************
கன்னல் மொழியே!
கற்கண்டுச் சுவையே!
என்னிதயம் தன்னில்
இரண்டறக் கலந்தவளே!
மான்விழிப் பார்வை
என்மேனி துளைக்குதடி!
குறுந்தொகைப் பாடலாய்
உனது குறும்புப்பேச்சு
என்சிந்தை சிதைக்குதடி!
நெடுநல்வாடையாய் உனது
நினைவும் நீளுதடி
குளிர் தென்றலாய்
உன தணைப்பும்
மெய்மறக்கச் செய்யுதடி!
கொஞ்சல் மொழியில்
குழந்தையைப் பார்க்கிறேனடி!
அன்பு மழையில்
அன்னையைக் காண்கிறேனடி!
நீயெனைப் பிரிந்தால்
வான்மழை காணாப்பூமியாய்
என் வாழ்வதுவும்
வறண்டே போகுமடி.!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment