வெற்றி அளித்த வரிகள்
************************
தலைப்பு : விதைகள்
-------------------------------
நாளைய நட்சத்திரங்கள்
இவர்கள்
நம்பிக்கையின் ஊற்றுகள்
வரலாறு படைக்கும்
ஆற்றல் உண்டு
விண்வரை சென்று
வெற்றிக்கனி பறிக்கும்
வீரக் குஞ்சுகள்
தடைகள் எதிர்ப்படின்
இவர்களிடம்
விடைகள் இருக்கு
அதைத் தகர்க்க
இளமைத் துடிப்பும்
இன்சொல் பேச்சும்
இவர்கள் மந்திரம்
முளையிலே கிள்ளிவிடாதீர்கள்
இவர்கள்
முளைவிடத் துடிக்கும்
இப்புவியின் வித்துகள்
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment