Friday, 22 December 2017

குறள் வழி புதுக்கவிதை; வெற்றிச் சான்றிதழ்; நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்;
*******************--*****************
உயிரும் உடலுமாய்
வாழ்ந்திருந்தோம்
நிலவும் வானுமாய்
சேர்ந்தே இருந்தோம்
வெந்நீராய் என் தேகம்
சுடுகின்றது
எனைவிட்டு நீ
பிரிந்தால்
பிரியாதே கண்ணா
நல்ல செய்தி
சொல்வாயோ
நீ எனை விட்டுப்
பிரிந்தால்
அடுத்த கணம்
உயிர் உடலை விட்டுப்
பிரிந்து
எனது உடல்
மண்ணோடு மண்ணாகும்
ஆதலால் உன் பிரிவை
இருப்பவரிடம் கூறிச் சொல்
பூவும் நாருமாய்
சேர்ந்தே இருப்போம்
இனி பிரிவேன்
என்ற செய்தியை
என் காதுகள்
ஏற்காது
எனைவிட்டுச் செல்லாதே
செல்லாதே என் ஆருயிரே!

No comments:

Post a Comment