வெற்றிச் சான்றிதழ்! என் சிந்தையைத் தூண்டிய நிலாச்சோறு குழுமத்திற்கு நன்றி.
----------------------------------------------------------
என்னவளே! இனியவளே!
எனது இதயத்தின்
கருமையத்தில் அன்பாய்!
குடிபுகுந்த முத்தே!
இனி நீ எனது
கண்ணாகவும் இரு!
கண்ணின் கருமணியின்
பாவையே நீ போய்விடு!
என்னவள் வந்துவிட்டாள்!
எனை வழிநடத்த!
எனது உயிரின் உயிரே!
நெஞ்சில் உறைந்த மன்னவனே!
அஞ்சுகிறேன் பதறுகிறேன்!
சூடான உணவதனை
நான் பார்க்கும்போதே!
சூரியனைக் கண்ட
பனிபோல் எனைவிட்டு!
பிரிந்து செல்வாயோவென்று!
.
No comments:
Post a Comment