துள்ளித்திரியும் இளஞ்சிறார்ளே!...
நீங்கள்தான் நம் தேசத்தின் மிகப்பெரிய சொத்து.
மாசில்லா முத்து.
உங்கள் தோற்றமோ மென்மை
நீங்கள்தான் நம் தேசத்தின் மிகப்பெரிய சொத்து.
மாசில்லா முத்து.
உங்கள் தோற்றமோ மென்மை
வயதில் இளமை
படிப்பில் வளமை
பண்பில் பசுமை
பேச்சில் புலமை
செயலில் புதுமை
அறிவில் செழுமை
அன்பில் இனிமை
நட்பில் ஒருமை
ஒழுக்கத்தில் மேன்மை
உன் உள்ளமோ அருமை
உன்னிட.த்தில் இல்லை பொறாமை
உன்னில் உலகம் வியக்கும் திறமை
இதுதான் உன் உடைமை
இதுவே உன் தனித்தன்மை
பல வண்ண மைகள் உன் எதிர் காலம்
வானைச் சுவராக்கி உன் குறிக்கோளைத்
தீட்டுவது எக்காலம்?
மனமே மந்திரக்கோல்
மனதில் தோய்ந்துள்ள உயிரை அறி
அறிவை உணர்
உண்மையைக் காண்
உலகம் உனது
சி.கிருஷ்ணா
No comments:
Post a Comment