வெற்றி அளித்த வரிகள் (சிப்பிக்குள் முத்து குழுமத்திற்கு நன்றி)
உன் பாதச்சுவடுகளில்;
*********************
நான் தவமிருக்கிறேன்
ஈராறு மாதங்களாய்
உயிராய் உண்மையாய்
எனதுடலை உருக்கி
எனது இதய அறையில்
உனை உள்ளே வைத்து
தினம் தினம் வணங்குகின்றேன்
உன் சுட்டுவிழிப் பார்வை
எனைச் சுற்றி சுற்றி
வலம் வாராதோ?
உனது திருவடிகளில்
நான் சரணடைகிறேன்
எனது குறைகளைப்
போக்கி
எனை ஏற்றுக் கொள்
என் மீதிக் காலம்
உனது பாதச் சுவடுகளை
முத்தமிட்டுக் கொண்டே
கழியட்டும்! விடியட்டும்!
இனி என் வாழ்வு.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment