வெற்றி அளித்த வரிகள்: சிப்பிக்குள் முத்து குழுமத்திற்கு நன்றி :
***************************************
ஜல்லிக்கட்டு காளை: (இரட்டைக்கிளவி)
***********--*-***********
டும்டும் என மங்கள
வாத்தியம் முழங்க!
படபடவென பட்டாசு
வெடிக்க!
பளபளவென்ற வேட்டிகள்
அணிந்த நாட்டார்கள் சூழ!
மினுமினுப்பாக சீவிய
கொம்புடன்!
கொழுகொழுவென கொழுத்த
காளைகள்!
திமுதிமுவென ஓடிவர!
மடமடவென்று வீரர்கள் ஓடி
அதனை மடக்க!
சிலுசிலுவென்று கொம்பை
ஆட்டி!
திருதிருவென்ற கண்களால்
மிரட்டி
துருதுருவென்ற வீரர்களை
நோக்கி!
சீறிப் பாய்ந்தனவே.!
No comments:
Post a Comment