Saturday, 6 January 2018


*******************
நெளிந்த நாணல்
புல் போல்
பச்சைப் பட்டுப்புடவையில்
வானுயர்ந்த மாளிகையில்
முகிலினங்கள் மோத
குளிர்ந்த காலையில்
ஆதவனின் கற்றை மின்ன
மாடப்புறாக்கள் பறக்க
நெடிய மரங்கள்
தென்றலாய் வீச
அணிந்த ஆபரணங்கள்
ஒளி வீச
நிலவே முத்துக்களாய்
சதங்கைக்குள்
சலக் சலக்கென்ற
சத்தம் முத்தமிட
மின்னலிடை நோக
பங்கயத்தன்ன பாதம்
வருந்திட
வைர மணிகளாய்
கண்கள் மிளிர
நவ்வி யன்ன
இளங் கொடியாள்
நல்லோர் போற்றும்
நறுந் தமிழாள்
வான்மதி தோற்கும்
ஒளிபொருந்திய முகத்தினள்
கம்பன் பாட
மறந்த காப்பியத்தாள்
பாரதி போற்றிடும்
தே மொழியாள்
கையிரண்டில் மலர்ச்சரம் ஏந்தி
வண்ணமான அன்னம்
நடை போட்டு
என்னருகில் என்னருகில்
என் மதுரையை ஆள
வந்து விட்டாள் மீனாட்சி.

    காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment