Monday, 16 January 2017

இன்றைய மனிதன்

மண்ணில்  மழை குதித்து ஆட !
விண்ணில் நிலவு தூய்மையாய் ஒளிர !
ஆதவன் பகல் இரவு உதித்து மறைய !
முகிலின் இடையே பறவை அதைக் கிழித்துப் பறக்க !
அருவி மலைகளில் மோதியோட !
வானில் விண்மீன்கள் தொங்கிமின்ன !
தென்றல் இசையாய்  அலை பாய !
மலரில் வண்டு மயங்கி தேன் உண்ண !
உயிர் ஜீவன்கள் இறைவனில் கரைந்து போக !
இயற்கை அழகு இங்கே இன்னும் மிச்சம் இருக்க !
நரன் மட்டும் ஏன் நரகத்தைத் தேடுகிறான் .

1 comment: