Monday, 16 January 2017

மழை

பூமியின் உயிர் சக்தியே !
 வானமகனே !
அனுதினமும் காதல் மோகம் கொள் !
புவியின் அழகு இன்னும் குறையவில்லை !
வாரி அனைத்து முத்தமிடு !
அவள் பொலிவு இன்னும் மாறவில்லை  !
இறுக்கிக்கொள் இருள் சூழ !
கருணையான அன்பு உனக்குப் புரியவில்லை !
உன்னை நினைத்தே உஷ்ணமானாள் !
அவள் சூட்டைத் தணிக்க மனமில்லை !
கனத்த இதயத்தோடு காத்திருக்கிறாள் !
பருவம் வந்தும் ஏன் இறங்கவில்லை !
அவள் அங்கங்கள் அத்தனையும் உனதே !
ஒருமனதாய் உனைத் தந்து விடு !
அமுதநீரைப் பரவலாய்ப் பொழிந்துவிடு !
ஓர வஞ்சகம் செய்யாதே !
வறட்சிதான் மிஞ்சிவிடும் !
வாடுவது அவள் முகம் மட்டுமா ?
உன் பிள்ளைகளும்தான் !!!

No comments:

Post a Comment