முரட்டுக்காளை _ இது
சர்க்கரைப் பொங்கல் தினம்
சங்கரன் காளை தினம்
ஜல்லிக்கட்டு
இளைஞரின் எழுச்சிக்கட்டு
மல்லுக்கட்டு வேட்டியை மடித்துக்கட்டு
பரம்பரை வழக்கம் - நம்ம
பண்பாட்டில் அடக்கம்
மணல் மேட்டைக் குத்தி
அனல் போல கொம்பைக் கூராக்கி
ஜல் ஜல்லுனு சலங்கை அணிந்து
பளபளப்பாய் எண்ணெய் தடவி
பெயர் சூட்டி அழகு பார்த்து
பிள்ளை போல வளர்த்து
நொவொன்னு வந்தா ? இவன் மனசு நொந்தான்
சீவகாருண்யம் பேசாம
சீவன் அதை நேசித்தான்
அள்ளும் பகலும் அதோட
அவனும் சேர்ந்தே வாழ்ந்தான்
வேற்றுமை இல்லையே - இவன்
வேலைவெட்டியே இதுதானே
வீரம் காரம் நிறைஞ்ச மண்ணு
வீரத்தமிழன் அடையாளம் தைமாதம் பிறந்தாச்சு!
இவன் வீரம் இங்கே சிந்த , தங்கத் தமிழனின் புகழ்
தரணி எங்கும் பொங்க!
தேவர்களின் விழிப்பு மாதம்,
தமிழர்களின் இனிய களிப்பு .
சங்ககாலம் தொட்டே
சடங்காய் இவை இருக்க காளை சிலிர்க்கும்போது
நெஞ்சுரம் பாய்ந்து நின்றான் .
கருஞ்சிறுத்தைப் போல - காளை
சீறிப் பாய்ந்து செல்ல,
பெரியகருப்புசாமியாய்ப் பாவித்து வேண்டி வணங்கி வந்தானே.