Saturday, 31 December 2016

பெண்ணியக் கவிதைகள்

பெண்மை போற்றும் தேசம்
வெறும் பெயரளவில் மட்டுமே
பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் கடற்கரை மணலைப்போல
கணக்கிலடங்கா!

Sunday, 25 December 2016

மாணவர் கவிதை

                                                            
                       

கொஞ்சும் அழகும் 
பிஞ்சு மொழியும் கூடிய 
இளஞ்சிறார்களே !
விளையாட்டாய்ப் பேசி வீணில் முடியும் 
விவாதம் அது வேண்டாமே !
உன் சிந்தையில் உதிக்கும் 
சிலவற்றை ஊன்றிக் கவனி !
சிகரத்தைத் தொடலாம்  நீ !
இந்த அவசர உலகில் அத்தனைக்கும் அவசரம் 
அமைதிதானே வேண்டும் நாம் வாழ்வில் உயர 
மனிதனாய்ப் பிறந்தால் மட்டும் போதாது ? இந்நாள் 
மகத்தான வெற்றியின் மைல்கல் வேண்டும் நம் பின்னால் !
நான் வாழணும், இல்லை நாம் வாழணும் 
இதுதானே நம் முன்னோர் கண்ட சூத்திரம் 
உயிர்  வாழ்வதற்காக உண் !
உண்பதற்காக வாழாதே !                       
நல்லது  கெட்டது கற்று உணரு !
நாலு நல்ல விஷயம்  தெரியும் பாரு !
நிலாச்சோறு ஊட்டும் கதை அது வேண்டாம் !
கண்டதையும் ரசிக்கலாம் அது காக்கையின் எச்சம் !
அதனால் நமக்கு என்ன மிச்சம் !
பண்புகள் ஆயிரம் உன்னிடம் கொட்டிக் கிடக்கு !
அன்புதானே உன் ஆயுதம் எதிரியை மடக்க !
உலகத்தை ஆளப்பிறந்தவனே !
இந்த உலகத்தில் அனைவரும் - உன் 
உடன்பிறப்புதானே !
உள்ளதைச் சொல் !
உண்மையை உணர் !
செழுமையாய்ச் சிரி !
சிறப்பாய் வாழ் !.....  
     

Wednesday, 21 December 2016

ஹைக்கூ

பங்காளிச் சண்டையில்
பதறிப் போனாள்.....
"காவிரித்  தாய்".

Tuesday, 20 December 2016

ஹைக்கூ

சொந்தங்கள் எல்லாம்
தொலைந்து போயின -இவைகள்
சொந்தமானதால்
''சொத்துக்கள்''


ஹைக்கூ

இரவை வரவேற்க
இயற்கை இட்ட வண்ணக்கோலங்கள்
''விண்மீன்கள்''
-கவிஞர் கிருஷ்ணா 

Tuesday, 15 November 2016

மாணவர் கவிதைகள்

துள்ளித்திரியும் இளஞ்சிறார்ளே!...
நீங்கள்தான் நம் தேசத்தின் மிகப்பெரிய சொத்து.
மாசில்லா முத்து.
உங்கள் தோற்றமோ மென்மை

Friday, 11 November 2016

ஹைக்கூ

இருப்பவனும் அல்லல் படுகின்றான்...
இல்லாதவனைப் போல்...
அதிகப் பணத்தால்..

Saturday, 5 November 2016

ஐக்கூப் பாக்கள்

கைப்பையே.
கேடயமானது..
பேருந்துப் பயணத்தின் போது..
                     - கிருஷ்ணா
.
திருடர்களுக்கும்
விடுமுறை தினம்....
பௌர்ணமி...
       ஹைக்கூ- கிருஷ்ணா

Wednesday, 12 October 2016

ஹைக்கூ

பணி முடித்து திரும்பினேன்....
முடிந்த போர்க்களமாய்...
           "என் வீடு"

           - கிருஷ்ணா

Monday, 10 October 2016

விநாயகர் காப்பு

முக்கண்ணன்  மைந்தனே!
மூத்தவனே, ஞானத்தின் ஒளியே!
முழுமுதல் விநாயகா!
மூவருக்ககும் மூலமானவனே!
முக்கோணத் தாமரையில் வீற்றிருக்கும் மூசிகவாகனனே!
முக்காலமும் உன் நினைவில்
நீங்காதிருக்க அருள்வாயாக...!

                  - கிருஷ்ணா