உழுக உழுக நிலம் பண்பட்டதோ?
பாவம் இவன் வைராக்கிய இதயம் பொடியானதே
எவர் கண்ணு பட்டதோ?
எங்கும் விவசாயிகளின் ஓலம்
வானமகனே உன்காது கிழியவில்லையா?
உனது பருவ கணக்கு தவறானதே
இவன் போட்ட கணக்கு பிணக்கானதே
உழைத்துழைத்து உடல் இருகிய அளவுக்கு
இவன் மனம் மட்டும் ஏன் மண்ணாங்கட்டியானதே
வெள்ளந்தியாய் பூத்துக் குலுங்கிச் சிரிக்கும் விவசாயியே
உனக்கு இது இலையுதிர் காலமோ?
உன் உயிர் ஒவ்வொன்றாக உதிர்கின்றதே!
பூச்சிக்கொல்லி பூச்சியை விரட்ட
உன் உயிரை விரட்டும் கொடுமை ஏனோ?
மண்ணாங்கட்டியை மல்லுக்கட்டி மல்லுக்கட்டி
இன்னும் மண்ணாங்கட்டியாய் இருக்கின்றாயே
பயிரும் வளரல பாலும் புடிக்கல பதறானதே!
இவன் உடம்பு வளரல வயிறும் நிறையல நிலையானதே!
தன்னம்பிக்கை இன்னும் குறையவில்லை
தலைகுனிய மாட்டான் இது பரம்பரையானதே!
ஒவ்வொரு சித்திரை பிறப்பன்றும்
உழுது சால் போடுவான்
இதுவே இவன் உனக்கு அனுப்பும் சங்கேத மொழியானதே!
ஒருநாள் மனம் குளிர்ந்து பொழிந்துவிடு
அழித்துவிடு இவன் போட்ட சாலை
அவனை வாழவிடு உயிர்பிச்சை கொடு
தலைமுறை தழைக்க.
காரைக்குடி கிருஷ்ணா
பாவம் இவன் வைராக்கிய இதயம் பொடியானதே
எவர் கண்ணு பட்டதோ?
எங்கும் விவசாயிகளின் ஓலம்
வானமகனே உன்காது கிழியவில்லையா?
உனது பருவ கணக்கு தவறானதே
இவன் போட்ட கணக்கு பிணக்கானதே
உழைத்துழைத்து உடல் இருகிய அளவுக்கு
இவன் மனம் மட்டும் ஏன் மண்ணாங்கட்டியானதே
வெள்ளந்தியாய் பூத்துக் குலுங்கிச் சிரிக்கும் விவசாயியே
உனக்கு இது இலையுதிர் காலமோ?
உன் உயிர் ஒவ்வொன்றாக உதிர்கின்றதே!
பூச்சிக்கொல்லி பூச்சியை விரட்ட
உன் உயிரை விரட்டும் கொடுமை ஏனோ?
மண்ணாங்கட்டியை மல்லுக்கட்டி மல்லுக்கட்டி
இன்னும் மண்ணாங்கட்டியாய் இருக்கின்றாயே
பயிரும் வளரல பாலும் புடிக்கல பதறானதே!
இவன் உடம்பு வளரல வயிறும் நிறையல நிலையானதே!
தன்னம்பிக்கை இன்னும் குறையவில்லை
தலைகுனிய மாட்டான் இது பரம்பரையானதே!
ஒவ்வொரு சித்திரை பிறப்பன்றும்
உழுது சால் போடுவான்
இதுவே இவன் உனக்கு அனுப்பும் சங்கேத மொழியானதே!
ஒருநாள் மனம் குளிர்ந்து பொழிந்துவிடு
அழித்துவிடு இவன் போட்ட சாலை
அவனை வாழவிடு உயிர்பிச்சை கொடு
தலைமுறை தழைக்க.
காரைக்குடி கிருஷ்ணா